Tuesday, January 17, 2017

ஒரு பெரியாரோ ஒரு பெருந்தலைவரே ஒரு அண்ணாவோ ஒரு கலைஞரோ ஒரு புரட்சித்தலைவரோ........

"அவருடன் "இணைபோல
இருந்ததால்  நான்
 என ஒருவர்

"அவருக்கு "மகனாக
இருப்பதால் நான்
என ஒருவர்

"அவருக்கு " உறவாக
இருப்பதால் நான்
என ஒருவர்

"அவருடனே "  தொடர்ந்து
இருந்ததால் நான்
என ஒருவர்

நம் தமிழகத்தின்
தலைமையின்
தலையெழுத்தெல்லாம்
இப்படி
ஆகிப்போனதால்தான்

" சுயத் தகுதியாக "
நானிருப்பதால்   நான்
எனும்படியாக

ஒரு பெரியாராகவோ
ஒரு பெருந்தலைவராகவோ
ஒரு அண்ணாவாகவோ
ஒரு கலைஞராகவோ
ஒரு புரட்சித்தலைவராகவோ

இனித்  தமிழகத்தில் தோன்ற
நிச்சயம் சாத்தியமில்லை
எனப்படுகிறது எனக்கு

இதன் தொடர்சியாய்..

தலைமையாசிரியருக்கு
விசுவாசமாக இருந்த
கடை நிலை ஊழியன்
பாடம் நடத்தவும்

மருத்துவருக்குத்
துணையாயிருந்த
எடுபிடி ஊழியன்
அறுவை சிகிச்சை செய்யவும்

விமானப் பயணிகளுக்கு
சேவையினைச் செய்த
விமானப் பணிப்பெண்
விமானம் ஓட்டவும்

இனி நிச்சயம்  தமிழகத்தில் சாத்தியமே
எனவுமே படுகிறது எனக்கு

இது எனக்கு மட்டும்தானா ?

இல்லை  ..... ?

11 comments:

ADMIN said...

ஹா..ஹா...!
தகுதி என ஒன்று உண்டு.
அது பெற்றிருந்தால்
அனைத்துமே சாத்தியமே...!

நிஷா said...

நேர்மையாக வந்தால் தகுதி இருந்தால் பதவி பொருட்டில்லை தான்.

VVR said...

உடனிருப்பது மட்டுமே தகுதியல்ல

திண்டுக்கல் தனபாலன் said...

அடியேனுக்கும்...

(!)

G.M Balasubramaniam said...

என்னமாதிரி எல்லாம் நினைக்கிறீர்கள்

மனோ சாமிநாதன் said...

எதிர்க்குரலும் போராட்டங்களும் இளைஞர்களிடமிருந்து வராத வரையில் நம் தாய்த்தமிழ் நாட்டில் எல்லாமே சாத்தியம்தான்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இனி நிச்சயம் தமிழகத்தில் சாத்தியமே
எனவுமே படுகிறது எனக்கு//

அடுத்த தேர்தலை சந்திக்கும்வரை மட்டுமே இதெல்லாம் ஒருவேளை சாத்தியமாக இருக்கக்கூடும்.

மக்கள் எல்லோரும் எப்போதும் முட்டாள்கள் அல்ல. இனிமேல் யாரையும் யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிடவும் முடியாது.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா ஆகா
அது சாத்தியம் என்றால்
இதுவும் சாத்தியம்தானே
தம +1

Bhanumathy Venkateswaran said...

மிக்க சரி ஐயா! நானும் உங்களை போலவே நினைக்கிறேன். தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட ஒரு நல்ல தலைவன் நமக்கு மாட்டானா?

Thulasidharan V Thillaiakathu said...

ஆகா! நல்ல சிந்தனை! ஓட்டு உங்களூக்கே!!

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் ஆதங்கம் பெரும்பாலான நம்மில் இருக்கிறது ஐயா.

Post a Comment